எனது கோவிலை இதற்காக பயன்படுத்துங்கள்: நிதி அகர்வால் அறிக்கை

1613572282 6746
1613572282 6746

பிரபல நடிகை நிதி அகர்வாலுக்கு சமீபத்தில் அவரது ரசிகர்கள் கோவில் எழுப்பினர் என்பதும் அந்த கோவிலில் பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது நிதி அகர்வால் தனது கோவில் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்காக கோவில் கட்டி அன்பை வெளிப்படுத்திய ரசிகர்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆனால் அந்த கோவிலை ஏழைகளுக்கு உணவு வழங்கும் கூடமாகவும் கல்வி கற்றுக் கொடுக்கும் பள்ளியாகவும் பயன்படுத்துங்கள் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையின்படி கோவிலை கல்விக் கூடமாகவும் உணவுக்கூடம் ஆகவும் மாற்றுவதற்கு அவரது ரசிகர்கள் ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.