சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

202005081209298568 Tamil News SASIKUMAR help for farmer SECVPF
202005081209298568 Tamil News SASIKUMAR help for farmer SECVPF

கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் பொன்ராம். அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’. சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ​வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 23-ந் தேதி இப்படம் தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.