திடீரென நடந்த ரஜினி மற்றும் செந்தில் சந்திப்பு!

1614051437 2522
1614051437 2522

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடிகர் செந்திலை அழைத்து தனது வீட்டில் நீண்ட நேரம் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர்கள் ரஜினிகாந்தும் செந்திலும் நீண்டகாலமாக நல்ல நண்பர்களாக இருந்து வந்தவர்கள். ரஜினியின் பல படங்களில் செந்திலுக்கு வேடம் வாங்கிக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். அதுமட்டுமில்லாமல் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இருவரும் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டனர்.

ஆனால் செந்தில் அதிமுகவில் இணைந்ததாலும், ரஜினிகாந்தின் அரசியல் வருகை பற்றி சலசலப்புகள் எழுந்ததாலும் செந்தில் ரஜினியை அரசியல் மேடைகளில் விமர்சிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் இருவரும் சந்திப்பது குறைந்தது. இந்நிலையில் இப்போது நீண்ட காலத்துக்குப் பிறகு செந்திலை தனது வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளாராம் ரஜினி. இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் நட்பு ரீதியான சந்திப்பு என்றும் சொல்லப்படுகிறது.