விஷ்ணு விஷால் நடித்து வரும் ‘மோகன் தாஸ்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

vikatan 2020 02 ee986f4a d636 4582 ac94 ade94ddd3a55 IMG 1132
vikatan 2020 02 ee986f4a d636 4582 ac94 ade94ddd3a55 IMG 1132

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கும் படம் மோகன் தாஸ். களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். உண்மைக்கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் நரகாசூரன் படத்தில் நடித்திருந்தார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் கவுதம் மேனன் இயக்கிய குயின் வெப் தொடரில் எம்.ஜி.ஆராக நடித்திருந்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.