கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு!

1614319177139240
1614319177139240

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. சிம்பு, திரிஷாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது.

அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் கடந்த 2016-ம் ஆண்டு ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப்படம் வெளியானது. இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இதனிடையே சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் அப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார். சிம்பு – கவுதம் மேனன் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.