மீண்டும் ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாகும் நடிகை

1614695104 2967
1614695104 2967

ஆர் ஜே பாலாஜி நடிக்கவுள்ள வீட்ல விஷேசங்க திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க உள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. வீட்டில் கல்யாண வயதில் மகளும் மகனும் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார்.

இந்நிலையில் முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர். போனி கபூர் தயாரிக்க உள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்துக்கு பாக்யராஜ் படத்தின் தலைப்பான வீட்ல விஷேசங்க என்ற தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இவர் ஏற்கனவே அவரோடு எல் கே ஜி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.