மின்னல் வேகத்தில் முடியும் சூர்யா படத்தின் படப்பிடிப்பு!

1612579115 6778
1612579115 6778

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் முதல் முறையாக சரத்குமார் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகர் வடிவேலு இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கியது. அங்கு சில காட்சிகளைப் படமாக்கிய பின்னர் இப்போது புதுக்கோட்டையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

துரிதமாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 16 ஆம் தேதியோடு முடிவடைகிறதாம். ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் படக்குழுவினர் கடினமாக உழைத்து வருகின்றனராம்.