விக்ரம் 60’ படத்தில் இணைந்துள்ள முன்னணி நடிகை !

1595585949 6872
1595585949 6872

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். இவருடன் இணைந்து பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். இவர் தற்போது துருவநட்சத்திரம் மற்றும் கோப்ரா போன்ற படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், விக்ரம் படத்தில் நடிக்கவுள்ள படம் ’விக்ரம் 60’ . இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் சமீபத்தில் வெளியானது.

இப்படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே விக்ரமுடன் இணைந்து சிம்ரன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

விக்ரம் 60 படத்தின் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குச் சென்று கால் பதித்து வெற்றி பெற்று முன்னணி நடிகையாக உள்ள வாணிபோஜன் நடிக்கவுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மார்ச் 10 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.