விஜய் படத்தால் வாய்ப்புகளை இழந்த நடிகர்!

1616124034 9403
1616124034 9403

பரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பின் கவனம் பெற்ற நடிகர் கதிர் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றி கதிரை தமிழகம் தாண்டியும் கவனிக்க வைத்தது. அதன் பின்னர் அவர் வரிசையாக படங்களில் முன்னணி நடிகராக வளம்வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக அதன் பிறகு எந்த வெற்றிப் படத்தையும் அவர் இன்னும் கொடுக்கவில்லை.

இதற்கெல்லாம் காரணம் அவர் பிகில் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதுதான் என சொல்லப்படுகிறது. அந்த படத்தில் ஒரு துக்கடா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 6 மாதங்கள் வரை அட்லி கதிரை உட்கார வைத்தார். அவரும் விஜய் கூட நடிக்கிறோம் என்பதால் தான் கதாநாயகனாக நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தவில்லை. பிகில் படம் வெளியான போது அவரின் கதாபாத்திரம் எந்த ஒரு வரவேற்பையும் பெறவில்லை. இப்போது அவரிடம் பெரிய அளவில் படங்களும் கைவசம் இல்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அவர் நடித்திருக்கும் சர்பத் படம் கூட திரையரங்கில் வெளியாகாமல் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. இனிமேலாவது கதிர் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.