வலிமை பட ஹீரோயினிடம் புதிய தகவல் கேட்ட பிரபல தமிழ் நடிகர்

202104011550442095 Tamil News Tamil cinema sidhharth ask huma quroshi valimai update SECVPF
202104011550442095 Tamil News Tamil cinema sidhharth ask huma quroshi valimai update SECVPF

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார்.

அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். 

சித்தார்த்

இந்நிலையில், நடிகை ஹூமா குரேஷியிடம் பிரபல நடிகர் சித்தார்த், சமூக வலைதளம் வாயிலாக வலிமை திரைப்படத்தின் புதியதகவல் கேட்டுள்ளார். நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்தார். இந்த பதிவுக்கு ‘வலிமை’ பட நாயகி ஹூமா குரேஷி ஒரு கருத்தை பதிவு செய்த நிலையில், சித்தார்த் அவரிடம் ‘மேடம் வலிமை திரைப்படத்தின் புதியதகவல்’ என்று கேட்டுள்ளார். சித்தார்த்தின் இந்த கருத்திற்க்கு லைக் குவிந்து வருகிறது.