ரூ.100 கோடி சம்பளம் பெறும் முதல் இந்திய நடிகர் இவர்தான்!

download 13
download 13

சில ஆண்டுகளுக்கு முன் பிரபாஸ், ராணா நடிப்பில் வெளியான படம் பாகுபலி1, மற்றும் பாகுபலி2. இந்த இப்படம் இந்திய எல்லையைத்தாண்டி உலகமெங்கும் வசூல் வாரிக் குவித்தது.

இதையடுத்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகர் ஆகிவிட்டார் நடிகர் பிரபாஸ். அவர் ஷாகோ படத்திற்கு தென்னிந்திய நடிகர்கள் யாரும் பெறாத அளவு பல கோடி சம்பளம் பெற்றதாகத் தகவல் வெளியான நிலையில் இதைவிடவும் அதிகமாக அவர் சம்பளம் வாங்குவதாகத் தெரிகிறது.

தற்போதைக்கு இந்திய சினிமாவில் அதிகளம் சம்பளம் வாங்கும் நடிகர் பிரபாஸ் தான். இவரது நடிப்பில் ராதே ஸ்யாம் படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.சலார், ஆதி புரூஸ் உள்ளிட்ட படங்களில் அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் போன்றோருடன் நடித்துவருகிறார்.

பிரபாஸுக்கு அதிகளவில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ரசிகரகள் இருப்பதால் அவரது படங்களுக்கு லாபம் கிடைப்பதால் தயாரிப்பாளர்கள் பிரபாஸ் கேட்ட சம்பளம் கொடுக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பிரபாஸ் சுமார் ரூ.7 கோடிக்கு விலையுயர்ந்த லாம்போஹினி காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பிரபாஸின் தந்தை பிறந்தநாளில் இக்கார் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.