விஜய் சேதுபதி அறிமுகமாகும் பொலிவுட் படத்தின் மாஸான பர்ஸ்ட் லுக் சுவரொட்டி வெளியானது!

202104031621380163 Tamil News Tamil cinema vijay sethupathis Mumbaikar movie first look SECVPF
202104031621380163 Tamil News Tamil cinema vijay sethupathis Mumbaikar movie first look SECVPF

பொலிவுட்டில் விஜய் சேதுபதி அறிமுகமாகும் மும்பைகார் எனும் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார்

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாநகரம். இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. மும்பைகார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி பொலிவுட்டில் அறிமுகமாகிறார். தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

மும்பைகார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில் இப்படத்தின் நாயகனான விக்ராந்த் மஸ்ஸேவின் பிறந்தநாளான இன்று, மும்பைக்கார் படத்தின் பர்ஸ்ட்லுக் சுவரொட்டியை . படக்குழு வெளியிட்டுள்ளது. விக்ராந்த் மஸ்ஸே, விஜய் சேதுபதி உள்பட சில நடிகர்களின் தோற்றங்களுடன் கூடிய இந்த பர்ஸ்ட் லுக் சுவரொட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.