தலைவி பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்ட பிரபல நடன இயக்குனர்

202104041156042762 Tamil News Tamil cinema Brintha master thalaivi dance SECVPF
202104041156042762 Tamil News Tamil cinema Brintha master thalaivi dance SECVPF

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி இருக்கும் ‘தலைவி’ படத்தின் பாடலுக்கு நடன இயக்குனர் நடனம் ஆடிய காணொளியினை வெளியிட்டிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்ளிடையே அதிக வரவேற்பு பெற்றது. இதனைத்தொடர்ந்து மழை மழை என்னும் முதல் பாடலை ஏப்ரல் 2 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டார்கள். இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில், இப்பாடலுக்கு நடனம் அமைத்திருந்த பிருந்தா மாஸ்டர், தனது சமூக வலைத்தள பக்கத்தில், மழை மழை பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.