பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த்துக்கு கொரோனா!

202104041532127591 1 sasi 1. L styvpf
202104041532127591 1 sasi 1. L styvpf

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நடிகர்கள் அமீர்கான், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதுபோல் தமிழ் நாட்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை கவுரி கிஷன், உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பதாக பதிவு செய்தார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சசிகாந்த், தமிழில் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, ஏலே, மண்டேலா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தையும் சசிகாந்த் தனது ஒய் நாட் ஸ்டியோஸ் மூலம் தயாரித்துள்ளார்.