கர்ணன் திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பெற்றார் நடிகர் மோகன்லால்!

555554
555554

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார்.

முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியாகிய அசுரன் திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையையும் மோகன்லால் தான் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.