அக்‌ஷய் குமாருடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட 45 பேருக்கு கொரோனா கொரோனா தொற்று உறுதி!

akshaykumar 1575700946
akshaykumar 1575700946

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் அக்‌ஷய் குமார் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அபிஷேக் ஷர்மா இயக்கிவந்த ’ராம்சேது’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், படக்குழுவைச் சார்ந்த 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது ராம்சேது படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.