10 வருடமாக ஏங்கினேன்? கண்ணீர் விட்டு கதறிய சுனிதா

625.500.560.350.160.300.053.800.900.160.90 6
625.500.560.350.160.300.053.800.900.160.90 6

விஜய் டிவியில் ஞாயிறு அன்று ஒளிபரப்பான வருத்தப் படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிகளின் பிரபலங்கள், தொகுப்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி சார்பாக கலந்துகொண்டு பேசிய சுனிதா, தான் வட இந்தியாவில் இருந்து கூட வரவில்லை.

வடகிழக்கில் இருந்து (அஸ்ஸாம்) வந்திருப்பதால் தமிழில் பேசுவது இன்னும் சிரமமாகவே இருக்கிறது.

ஒரு பத்து வருடமாகவே நானும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி தொடங்கி எவ்வளவோ செய்து பார்த்தேன். ஆனால் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை என்று கூறினார்.

மேலும் அதில், “குக் வித் கோமாளிக்கு எதார்த்தமாக தான் போனேன். போகப் போக என்னை பற்றி மீம்ஸ் வர தொடங்கியது. 10 வருடம் வராத ஒரு விஷயம். இது எப்போ கிடைக்கும் என ஏங்கினேன்.

ஆரம்பத்தில் நான் மிகவும் கீழ்மையாக யோசித்தேன். ஆனால் இப்போது நான் தமிழ் மக்களின் மனதில் உட்கார ஆரம்பிச்சேன்.

அவர்கள் என்னை விரும்ப தொடங்கிவிட்டனர். எனக்கு நிம்மதியாக இருக்கிறது!” என குறிப்பிட்டுள்ளார்.