ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள் – சோனு சூட்

1549677186 8029
1549677186 8029

கொரொனா காலத்தில் ஏழைகள்,விவசாயிகள்,மாணவர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிசெய்தவர் சோனு சூட். இந்நிலையில் அவர் பெயரைப் பயன்படுத்தி ஏழை மக்கள ஏமாற்றி வந்த நபரை தெலுங்கானா மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நடிகர் சோனு சூட்டின் பெயரைப் பயன்படுத்தி சிலர் மக்களை ஏமாற்றி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் ஒருவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவரின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் சோனு சூட் கூறியுள்ளதாவது:

உதவி வேண்டுபவர்களை ஏமாற்றும் இத்தகைய குற்றவாளிகளை கண்டிறிந்து கைது செய்த தெலுங்கானா காவல்துறையினருக்கு நன்றி .இதுபோன்ற ஏமாற்று வேலைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.