நடிகர் தனுசுடன் மோதும் நயன்தாரா

Nayantara
Nayantara

நடிகர் தனுஷின் கர்ணன் படத்துடன் நடிகை நயன்தாராவின் நிழல் படம் மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் எஸ்.தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன்.

இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளியான நிலையில் சமீபத்தில் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் யு/ஏ கிடைத்தது. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இதே தினத்தன்று நயன் தாரா மற்றும் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் அப்பு என் பட்டதாரி இயக்கத்தில் உருவாகியுள்ள நிழல் என்ற திரில்லர் படமும் வெளியாகவுள்ளது.