வெளியாகிய ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர்!

202104072028483184 1 chips 2. L styvpf
202104072028483184 1 chips 2. L styvpf

லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில், ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு “முருங்கைக்காய் சிப்ஸ்” என பெயரிட்டுள்ளனர். இதில் கதாநாயகனாக சாந்தனுவும், அவருக்கு ஜோடியாக அதுல்யாவும் நடிக்கிறார்கள். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ஊர்வசி, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நகைச்சுவை திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. ஒரு திருமணமாகிய புதிய இளம்ஜோடிக்கு முதலிரவு நடப்பதை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார்கள். தற்போது இந்த டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.