கதாநாயகனாக நடிக்கும் சதீஷ்!

sathish 3 1576073809
sathish 3 1576073809

தமிழ்த் திரையுலகில் வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி உட்பட பல்வேறு பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகர்களாக உயர்ந்துள்ளனர். தற்போது நடிகர் சதீஷும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். இவர் தற்போது, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். இது அவர் இயக்கும் முதல் படமாகும்.

பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சென்னையிலேயே நடைபெற உள்ளது. இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கவுள்ளார். பிரவீன் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைக்க உள்ளனர்.