தனுஷுடன் நடித்த பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி!

202104082256537759 1 aishwarya 1. L styvpf
202104082256537759 1 aishwarya 1. L styvpf

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கை முறைகளையும் அவர் எடுத்துள்ளார்.