திருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை

202104092223282172 1 chaitara 3. L styvpf
202104092223282172 1 chaitara 3. L styvpf

திருமணமான ஒரே மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இவர் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நடிகை சைத்ராவை தொழிலதிபர் நாகார்ஜூனன் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணமாகி ஒரு மாதம் ஆகியும் இன்னும் இருவரும் ஒன்றாக வாழவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சைத்ராவின் வாக்குமூலத்தை வாங்கிய பின்னரே இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.