குக் வித் கோமாளி அஸ்வின் நடிக்கும் முதல் படம்

1617090728 8167
1617090728 8167

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நேற்று முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பெற்ற அஸ்வினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அஸ்வின் நடிக்கும் முதல் படம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. டிரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக அஸ்வின் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை ஹரிஹரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

அஸ்வினுடன் ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி புகழ் நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது