சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி!

vijay antony
vijay antony

திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மேலும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

அதன்படி, தமிழ் படம் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக உள்ளது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.