படங்கள் நன்றாக இருந்தால் மக்கள் திரையரங்குக்கு வருவார்கள் -அருண் விஜய்

1618542868 7041
1618542868 7041

அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கியுள்ள பார்டர் படத்தின் அறிமுக விழா இரு தினங்களுக்கு முன்னர் சென்னை நட்சத்திர விடுதியில் நடந்தது.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் திரைப்படம் “பார்டர்”. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் படம் இந்த “பார்டர்”. இந்த படத்தின் அறிமுக விழா சென்னை பார்க் விடுதியில் வித்தியாசமான முறையில் நடந்தது.

அப்போது பேசிய அருண் விஜய் ‘எனது சினிமா வாழ்க்கையில் பார்டர் என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். திரைப்படங்கள் நன்றாக இருந்தால் மக்கள் கண்டிப்பாக திரையரங்குக்கு வருவார்கள் என்பதை கொரோனா காலத்திலும் ரசிகர்கள் நிரூபித்துள்ளார்கள்.’ எனக் கூறியுள்ளார்.