காவல்துறை இலக்கத்தை ரசிகருக்கு கொடுத்த சுருதிஹாசன்!

shruti hassan hdwallpaper 1024x704 720x450 1
shruti hassan hdwallpaper 1024x704 720x450 1

கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன.

தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் ‘மேடம், பிளீஸ் உங்களது வாட்ஸ் ஆப் நம்பரைக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த நடிகை சுருதி ஹாசன், காவல்துறை அவசர உதவி எண் ஆன 100 என்ற நம்பரைக் குறிப்பிட்டிருந்தார். நடிகர் சுருதி ஹாசனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.