ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ்!

NTLRG 20190212170015147845
NTLRG 20190212170015147845

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’ போன்ற ஆந்தாலஜி படங்களிலும் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இப்படத்தை வினில் வர்கீஸ் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நமீதா பிரமோத் நடிக்கிறார்.

இப்படத்திற்கு மலையாளத்தில் ‘ரஜினி’ என பெயர் வைத்துள்ளனர். ஆனால் தமிழ் தலைப்பை வெளியிடவில்லை. இப்படத்தில் காளிதாஸ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளதால் படத்திற்கு ரஜினி என தலைப்பு வைத்துள்ளார்களாம். தமிழில் ஏற்கனவே ரஜினி என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருவதால், இப்படத்திற்கு ‘ரஜினி ரசிகன்’ என தலைப்பு வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.