“விஸ்வாசம்” நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது – நயன்தாரா

1576562338 3427
1576562338 3427

விஸ்வாசம்’ படத்தின் போது விவேக் அவர்களுடன் பழகிய நினைவுகளை என்னால் மறக்க முடியாது என நடிகை நயன்தாரா விவேக் மறைவு குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்

நகைச்சுவை நடிகர் விவேக் காலமான நிலையில் அவருடன் நடித்த பல நடிகர்கள் தங்களது நினைவலைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். அந்தவகையில் விவேக்குடன் பல படங்களில் நடித்துள்ள நடிகை நயன்தாராவும் தன்னுடைய இரங்கலை தெரிவித்து அவருடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்

விவேக் அவர்களுடன் நான் பல படங்களில் நடித்து உள்ளேன் என்றும், குறிப்பாக ‘விஸ்வாசம்’ படத்தில் அவருடன் நடித்தபோது ஏற்பட்ட நினைவலைகள் எப்போதும் எனது மனதில் ஞாபகம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு சீக்கிரம் அவர் சென்று விடுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் வாழ்க்கை என்பது கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது என்பது அவரது இழப்பு மூலம் தெரிய வருகிறது என்றும் அவரது மறைவை தாங்க கூடிய அளவுக்கு கடவுள் அவருடைய குடும்பத்திற்கு பலத்தை அளிக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்