ஓடிடி-யில் வெளியிட தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்?

202104230739222891 Tamil News Tamil cinema Trishas Raangi movie eye for OTT release SECVPF
202104230739222891 Tamil News Tamil cinema Trishas Raangi movie eye for OTT release SECVPF

அண்மையில் திரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சரவணன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ராங்கி’. இப்படத்திற்கான கதை மற்றும் வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். ‘ராங்கி’ என்றால் அடங்காத, துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள். 

படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

ராங்கி படத்தின் போஸ்டர்

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ராங்கி படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் திரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.