‘சுல்தான்’ படத்தின் ஓடிடி வெளியீட்டு திகதி அறிவிப்பு!

karthi in sulthan tamil movie stills 007 1617375392
karthi in sulthan tamil movie stills 007 1617375392

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம் சுல்தான். அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்திருந்த இப்படம், ஏப்ரல் 2-ந் திகதி தமிழ், தெலுங்கில் வெளியானது.

தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் சுல்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், சுல்தான் படத்தின் தெலுங்குப் பதிப்பு வருகிற ஏப்ரல் 30-ந் திகதி ஓடிடியில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேபோல் விரைவில் சுல்தான் தமிழ் பதிப்பின் ஓடிடி வெளியீட்டு திகதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.