செல்வராகவன் உதவி இயக்குனரின் படத்தில் ரித்திகாசிங்!

1595906567 9
1595906567 9

பிரபல இயக்குனர் செல்வராகவனின் உதவியாளர்கள் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களை இயக்கி உள்ள நிலையில் தற்போது அவரிடம் உதவியாளராக இருந்த மேலும் ஒருவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

செல்வராகவன் சில படங்களில் உதவியாளராக இருந்தவர் மைக்கேல். இவர் தற்போது ஒரு புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரித்திகாசிங் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது