புதிய அவதாரம் எடுக்கும் கங்கனா ரனாவத்!

202105011648394176 Tamil News Tamil cinema kangana turns to producer SECVPF
202105011648394176 Tamil News Tamil cinema kangana turns to producer SECVPF

பிரபல பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவர் தற்போது புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 23-ம் திகதி திரையரங்குகளில் ‘தலைவி‘ வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், கொரோனா பரவலால் ‘தலைவி’ படத்தின் வெளியீட்டைத் திகதி குறிப்பிடாமல் படக்குழுவினர் ஒத்திவைத்தனர்.

கங்கனா ரனாவத்

நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கங்கணா, தற்போது தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். தனது மணிகர்னிகா பிலிம்ஸ் சார்பில் ‘டிக்கு வெட்ஸ் ஷெரு’ என்ற படத்தைத் தயாரிக்கவுள்ளார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.