மீண்டும் படம் தயாரிக்கும் சங்கிலி முருகன்

1619878137 5968
1619878137 5968

பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தயாரிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்ட நிலையில் இப்போது மீண்டும் படங்களை தயாரிக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் 90 களில் அதிகமாக படங்களை தயாரித்த அவர் பின்னர் தயாரிப்புப் பணிகளை நிறுத்திக் கொண்டார். கடைசியாக விஜய் நடிப்பில் சுறா படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் சங்கிலி முருகன் இப்போது மீண்டும் படம் தயாரிக்க உள்ளாராம். மண்டேலா போல நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரிக்கும் திட்டத்தில் உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் சுறாவுக்கு பின்னர் விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி விஜய்யை பின் தொடர்ந்து வருகிறாராம்.