கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகை சாக்‌ஷி அகர்வால்

sakshi agarwal 15895341689997
sakshi agarwal 15895341689997

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். தற்போது மே 1-ந் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், நடிகை சாக்‌ஷி அகர்வால் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், தடுப்பூசி போடும் போது எடுத்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பை தவிர்க்க அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார். நடிகை சாக்‌ஷி, கைவசம் அரண்மனை 3, பஹிரா, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், புரவி, தி நைட் போன்ற படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.