எனது அப்பா எப்போதும் எனக்கு பெருமை ஆனவர் – ஸ்ருதிஹாசன்

sruthi
sruthi

தமிழக சட்டமன்ற தேர்தலில் சரத்குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது

கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் முன்னிலை வகித்தாலும் கடைசியில் அவர் ஆயிரத்து 600 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி ஸ்ரீனிவாசன் தோல்வி அடைந்தார்

இந்த நிலையில் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் தோல்வி குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் அதில் எனது அப்பா எப்போதுமே எனக்கு பெருமை ஆனவர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது