சிம்பு நடித்துள்ள மஹா திரைப்படத்தை வெளியிட தடை

download 1 30
download 1 30

சிம்பு நடித்துள்ள மஹா திரைப்படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில், தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகா் சிம்பு, நடிகை ஹன்சிகா நடித்துள்ள மஹா என்ற படத்தை எட்சட்ரா எண்டா்டெயின்மெண்ட் நிறுவனம் சாா்பில் மதியழகன் தயாரிக்கிறாா். திரைப்படத்தை யு.ஆா்.ஜமீல் இயக்கினாா்.

இந்நிலையில், தனக்குத் தெரியாமல் படத்தை முடித்து, ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாகக் கூறி, படத்தை வெளியிடத் தடை விதிக்க இயக்குநா் ஜமீல், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுவுக்கு வரும் 19 ஆம் திகதிக்குள் பதிலளிக்கும்படி, எட்சட்ரா தயாரிப்பு நிறுவனம், உதவி இயக்குநா் அஞ்சு விஜய் மற்றும் படத் தொகுப்பாளா் ஜான் ஆபிரகாம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.