நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா!

576529
576529

கொரோனா 2-வது அலையில் நடிகர் -நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் சிக்கி வருகிறார்கள். தற்போது நடிகை சம்யுக்தா ஹெக்டேவும் கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். இவர் ஜி.வி.பிரகாசுடன் வாட்ச்மேன், ஜெயம் ரவியின் கோமாளி, வருணுடன் பப்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சம்யுக்தா ஹெக்டேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் சம்யுக்தா ஹெக்டேவின் பெற்றோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.