கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய லிங்குசாமி!

image 2021 05 31 233436
image 2021 05 31 233436

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 இலட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 இலட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 இலட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 இலட்சம் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் இயக்குனர்-தயாரிப்பாளர் லிங்குசாமி கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 இலட்சத்துக்கான காசோலையை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கி இருக்கிறார்.