அஜித்துடன் நடித்த ராய் லட்சுமி மோட்டார்வண்டி செலுத்தும் வீடியோ வெளியாகியது

samayam tamil
samayam tamil

அஜித்தின் மங்காத்தா படத்தில் நடித்த ராய் லட்சுமி மோட்டார்வண்டி ஓட்டும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. உங்களுக்கு மோட்டார்வண்டி எல்லாம் ஓட்டத் தெரியுமா என்று ரசிகர்கள் வியந்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

விக்ராந்தின் கற்க கசடற படம் மூலம் நடிகையானர்
ராய் லட்சுமி. 15 வயதில் நடிக்க வந்த அவர் இதுவரை சுமார் 50 படங்களில் நடித்துள்ளார்.

அவர் தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அஜித்தின் மங்காத்தா படத்தில் நெகட்டிவான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார்.

அதர்வாவின் இரும்பு குதிரை, சுந்தர்சியின் அரண்மனை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஜூலி 2 இந்தி படத்திற்காக அவர் கூடுதல் கவர்ச்சி காட்டி நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

தற்போது அவர் கையில் 2 தமிழ் படங்கள், ஒரு தெலுங்கு படம் இருக்கிறது. உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்ட ராய் லட்சுமி ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் இருப்பவர்.

அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்கள், பிகினி புகைப்படங்களை வெளியிடுவார். பிற நடிகைகள் பிகினி புகைப்படத்தை வெளியிட்டால் கிண்டல் செய்யும் சமூக வலைதளவாசிகள் ராய் லட்சுமியை மட்டும் பாராட்டுவார்கள்.
இந்நிலையில் சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நினைத்தாரோ என்னவோ, தான் மோட்டார்வண்டி ஓட்டும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கருப்பு உடையில் ராய் லட்சுமி மோட்டார்வண்டி ஓட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.