தற்போது வெளியாகியுள்ள திருமண செய்தியும் வதந்திதான் நம்பாதீங்க- அஞ்சலி

202106071740110510 Tamil News Tamil cinema Anjali says about rumour SECVPF
202106071740110510 Tamil News Tamil cinema Anjali says about rumour SECVPF

வழக்கம் போல் தற்போது வெளியாகியுள்ள செய்தியும் வதந்தி தான் என்று முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

கற்றது தமிழ்’ படம் மூலமாக ராம் இயக்கத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் ‘அங்காடித் தெரு’ படம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தது. எங்கேயும் எப்போதும், இறைவி உள்ளிட்ட படங்களில் அவர் நடிப்புக்கு பெயர் கிடைத்தது. தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 


நடிகை அஞ்சலி கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது அஞ்சலி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றது. அஞ்சலி திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவுவதுண்டு. அதே போல் தான் தற்போது வெளியாகியுள்ள திருமண செய்தியும் வதந்தி தான் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

அஞ்சலி

“தற்போது நான் எனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் குறித்து நான் தற்போது யோசிக்கவில்லை. வரவிருக்கும் நாட்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.