விஜய் படத்தில் இருக்கிறேன்; உறுதி செய்த நகைச்சுவை நடிகர்!

1623134023 2884
1623134023 2884

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கும் படத்தில் நடிப்பதை யோகிபாபு உறுதி செய்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பதும் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

இந்த நிலையில் தளபதி 65 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இந்த படத்தில் யோகி பாபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அதை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் ரசிகர்களுடன் சமூகவலைதளங்களில் நடந்த உரையாடலில் அவர் இதை கூறியுள்ளார். யோகிபாபு விஜய்யுடன் ஏற்கனவே மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.