முகக்கவசத்தை இப்படி அணியக் கூடாது – நடிகர்களின் விழிப்புணர்வு!

1623118515 video actor 2
1623118515 video actor 2

முகக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு விடியோவைப் பிரபல நடிகர், நடிகைகளுடன் இணைந்து வெளியிட்டுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 1.14 லட்சம் போ் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14,77,799 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கொரோனா விழிப்புணர்வுப் பிரசார விடியோக்களைத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகர், நடிகைகளுடன் இணைந்து முகக்கவசத்தைச் சரியாக அணிவது தொடர்பான விடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ரெஜினா, வித்யுலேகா ராமன், சுந்தீப் கிஷன், கிருஷ்ணா, சதீஷ், பிரியதர்ஷி, வரலட்சுமி போன்றோர் இந்த விடியோவில் இடம்பெற்றுள்ளார்கள்.