மகிழ்ச்சிக்கு இதில் ஈடுபடுங்கள் – கார்த்தி பட நடிகை அறிவுரை

1617018534 436
1617018534 436

இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கில் வீட்டிலேயே இருப்பவர்களுக்கு சுல்தான் பட நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு அறிவுரை கூறியுள்ளார்.

அதில், எனது தோழி எனக்குக் கூறியதை நான் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்களுக்கு எந்த விஷயம் மகிழ்ச்சி தருகிறதோ அதில் ஈடுபடுங்கள்….அவை பணம் அல்லது அறிவு தரும் துறைகளாகக் கூட இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இவர் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.