மாநாடு படத்தின் முதல் பாடல் ஜூன் 21 ஆம் திகதி வெளியாகும்!

மாநாடு படத்தின் முதல் பாடல்
மாநாடு படத்தின் முதல் பாடல்

மாநாடு படத்தின் முதல் பாடல் ஜூன் 21 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம். நாதன். இப்படத்தில் முதல்முறையாக இஸ்லாமிய இளைஞராக, அப்துல் காலிக் என்கிற வேடத்தில் நடிக்கிறார் சிம்பு.

மாநாடு படத்தின் முதல் பாடலை ரமலான் தினத்தன்று வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வெங்கட் பிரபுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானதால் மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் முதல் பாடல் ஜூன் 21 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.