விரைவில் திருமணம்.

1623390629 Gangai 2
1623390629 Gangai 2

பிரபல இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என பல அவதாரங்களில் தமிழ் திரையுலகில் ஜொலித்தவர் கங்கை அமரன்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது மகன் பிரேம்ஜி அமரன் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் பிரேம்ஜிக்கு இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருக்கிறோம். தற்போது தான் அவருடைய அம்மா இறந்து உள்ளதால் அந்த சோகம் முடிந்த பிறகு அவருக்கு திருமணம் செய்து வைக்க இருக்கிறோம். மேலும் இதுவரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்த பிரேம்ஜி தற்போது ஒப்புக் கொண்டு இருப்பதாகவும், அவருக்கேற்ற சரியான பெண் அமைந்ததும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.