ரித்விகாவின் கருத்துள்ள குறும்படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்!

1624276119 1368
1624276119 1368

தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது.

தொடர்ந்து கருத்துள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பெண் குழந்தைகளின் படிப்பை பாதியில் நிறுத்த கூடாது என்ற கருத்தை அடிப்படையாக வைத்து அவர் நடித்துள்ள என் அருமைக் கன்னுக்குட்டி என்ற குறும்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.