‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’

1624424383 Beast 2
1624424383 Beast 2

நடிகர் விஜய்யின் 65 வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது.

பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த போஸ்டர், தற்போது டுவிட்டரில் புதிய சாதனையையும் நிகழ்த்தி உள்ளது. வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்ற சாதனையை ‘பீஸ்ட்’ பட போஸ்டர் படைத்துள்ளது.

இதற்கு முன் விஜய்யின் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 2 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகள் பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது பீஸ்ட் பட போஸ்டர் 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 78 ஆயிரம் லைக்குகளை பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.