நயன்தாரா குறித்த ரசிகர்களின் அடுக்கடுக்கான கேள்விகளும்… விக்னேஷ் சிவனின் பதில்களும்

202106281953339258 1 nauud5. L styvpf
202106281953339258 1 nauud5. L styvpf

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை 6 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்

சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடிதான்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார். இவர் இயக்கத்தில் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர்.


இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள், நயன்தாரா குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்திற்கும் விக்னேஷ் சிவன் பதிலளித்தார். அதன் தொகுப்பை காணலாம்.


கேள்வி: நயன்தாராவுக்காக உங்களின் முதல் கிப்ட் என்ன?பதில்: தங்கமே… பாடல்
கேள்வி: நயன்தாராவுக்கு எந்த லுக் பொருத்தமாக இருக்கும், வெஸ்டர்ன், டிரெடிஷனல் உங்கள் விருப்பம் எது?பதில்: அவர் புடவையில் இருப்பது ரொம்ப பிடிக்கும்.
கேள்வி: நயன்தாரா அழகின் ரகசியம் என்ன?பதில்: பிரார்த்தனைகள்

202106281953339258 Tamil News Tamil cinema Vignesh shivan chat with his fans SECVPF

கேள்வி: நயன்தாராவுடன் உங்களது விருப்பமான இடம்?பதில்: அவருடன் எங்கு சென்றாலும் அது உடனடியாக விருப்பமான இடமாகிவிடும்.
கேள்வி: நயன்தாரா நடிச்சதுல உங்க அபிமான திரைப்படம் எது?பதில்: ராஜா ராணி
கேள்வி: நயன்தாரா, உங்களைப் பற்றிய சில ரகசியம் பதில்: டின்னர் முடிந்ததும் வீட்டில் அனைத்து பாத்திரங்களையும் அவரே கழுவுவார்.
கேள்வி: நயன்தாரா கூட நடிக்க ஏன் முயற்சி பண்ணல?பதில்: முயற்சி பண்றேன். ஆனா, அவங்க கண்டுபிடிச்சிடுறாங்க.
கேள்வி: நயன் சமைக்கிறதுல பிடிச்சது?பதில்: கீ ரைஸ், சிக்கன் கறி
கேள்வி: ஒரு நாள் திடீரென, நீங்கள் நயன்தாராவாக மாறிவிட்டால் என்ன செய்வீர்கள்?பதில்: ஷுட்டிங் போக வேண்டியதுதான்.
கேள்வி: நயன்தாரா பத்திதான் எல்லாரும் கேக்குறாங்க, என்ன பீல் பண்றீங்க?பதில்: பெருமையா இருக்கு