பிசாசு 2 படத்தில் இணைந்த நடிகை

1626777927 2126
1626777927 2126

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி புதிதாக இணைந்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் பூர்ணா நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி படக்குழுவோடு இணைந்துள்ளார்.